10–ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு: குமரி மாவட்டத்தில் 6,851 பேர் எழுதினர்
10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு பிளஸ்–1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க மத்திய அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு நேற்று நடந்தது.
நாகர்கோவில்,
10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு பிளஸ்–1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க மத்திய அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்வு 20 மையங்களில் நடந்தது. தேர்வு எழுதுவதற்காக 7,206 பேருக்கு நுழைவு சீட்டு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இவர்களில் 6,851 பேர் நேற்று தேர்வு எழுதினர். காலை 9.30 மணி முதல் 11 மணி வரை சிந்தனை திறன் தேர்வும், 11.30 மணி முதல் 1 மணி வரை கல்வித்திறன் தேர்வும் நடந்தது.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுபோல் மற்ற மையங்களிலும் கல்வி மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story