எனது குடும்பத்தினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் டி.டி.வி.தினகரன் பேச்சு


எனது குடும்பத்தினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 19 Nov 2017 4:45 AM IST (Updated: 19 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

எனது குடும்பத்தினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயார் என டி.டி.வி.தினகரன் கூறினார்.

கோட்டைப்பட்டினம்,

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று இரவு காரில் சென்றார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மீமிசலில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி தலைமையில், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் அலி அக்பர் மற்றும் கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் டி.டி.வி.தினகரன் காரில் இருந்தபடியே தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அம்மா அவர்கள் எவ்வாறு இந்த அரசை நடத்தி சென்றாரோ, அதேபோல நாமும் இந்த அரசை வழிநடத்தி செல்ல உறுதிமொழி எடுக்க வேண்டும். ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது கண்டனத்திற்குரியது. இதனால் அம்மாவிற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் துரோகம் செய்து விட்டனர். அம்மாவின் ஆன்மா இவர்களை ஒருபோதும் மன்னிக்காது. என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன். நாம் அனைவரும் சேர்ந்து தற்போது நடைபெற்று வருகிற செயலற்ற ஆட்சியை அகற்ற பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் பேராவூரணிக்கு புறப்பட்டு சென்றார். 

Next Story