பெரம்பலூரில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 1,800 மாணவ-மாணவிகள் எழுதினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 1,800 மாணவ-மாணவிகள் எழுதினர். 52 பேர் தேர்வுக்கு வரவில்லை.
பெரம்பலூர்,
தமிழகத்தில் தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் தாங்கள் 9-ம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்ததை தகுதியாக வைத்து கொண்டு தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் பள்ளி படிப்பு முடியும் வரை கல்வி உதவித்தொகை அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.1,000 வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளில் 1,852 பேர் தேசிய திறனாய்வு தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
9 மையங்களில் நடந்தது
அந்த தேர்வானது பெரம்பலூர் அரசுமேல்நிலைப்பள்ளி, குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, லெப்பைக்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் நேற்று நடந்தது.
காலை 9.30 மணிக்கு தொடங்கி 11 மணி வரை மனத்திறன் தேர்வும், அதன் பின்னர் 11.30 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடந்தது. மாணவர்களின் திறனை கண்டறியும் பொருட்டு 9-ம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களிலிருந்தும், பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே வார்த்தையில் விடையளித்து அதனை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் ஷேட் செய்யும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
1,800 பேர் பங்கேற்பு
தேர்வு மையங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி நேரில் சென்று தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பது குறித்தும், தேர்வு எழுத போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் மைய பொறுப்பாளரிடம் தேர்வுக்கு வருகை புரிந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர் கேட்டறிந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் 1,800 பேர் பங்கேற்று தேர்வினை ஆர்வத்துடன் எழுதினர். 52 பேர் மட்டும் தேர்வுக்கு வரவில்லை என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

Related Tags :
Next Story