கழிவுநீர் குழாயில் உடைப்பு: வாய்க்காலில் வெளியேறிய காவிரி நீர் மணல்மூட்டைகளால் அடைக்கப்பட்டது
தஞ்சையில் புது ஆற்றின் அடியில் உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் காவிரி நீர் வெளியேறி தெருக்களில் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து வாய்க்காலில் இருந்து நீர் வெளியேறியதை மணல் மூட்டைகளை கொண்டு பொதுப்பணித்துறையினர் அடைத்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர சாக்கடை வாய்க்கால்களில் வரும் கழிவுநீர் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் புது ஆற்றுக்கு அடியில் குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரி பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. புது ஆற்றின் மேல் கரையில் சிறிய தொட்டி போல கட்டப்பட்டு அதில் இருந்து ஆற்றுக்கு அடியில் குழாய்கள் மூலம் கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டு மறுகரையில் வாய்க்கால்களில் செல்கிறது.
இவ்வாறு அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாயில் தஞ்சை ஜெயராம் மகால் அருகே புதுஆற்றின் நடுப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் காவிரி நீர் கழிவுநீர் குழாய்கள் வழியாக வாய்க்காலில் அதிக அளவில் வெளியேறியது. இதனால் தஞ்சை மிஷன்தெரு, பீட்டர் சர்ச் எதிரே உள்ள சாலை, அந்தோணியார் கோவில் தெரு, ஆரோக்கியமாதா தெரு உள்ளிட்ட தெருக்களில் தண்ணீர் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள வீடுகளின் வாசல் வரை தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தற்போது ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் செல்வதால் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை உடனடியாக சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் அறிவுரையின் பேரில் கல்லணைக்கால்வாய் செயற்பொறியாளர் ரேவதி, உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், சுந்தர், மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் வெளியேறியதை பார்வையிட்டு அதனை அடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை பணியாளர்களைக்கொண்டு நேற்று காலை முதல் வாய்க்காலிலில் மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கப்பட்டு தண்ணீர் வெளியேறியதை அடைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மதியம் 12 மணி அளவில் இந்த பணிகள் முற்றிலும் முடிவடைந்தது. இதையடுத்து தெருக்களில் தேங்கிய தண்ணீர் வடியத்தொடங்கியது. இதனை தஞ்சை தாசில்தார் தங்க.பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் எனப்படும் புது ஆறு ஆகிய ஆறுகளில் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது. புது ஆற்றின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் இன்னும் வரவில்லை என விவசாயிகள் கூறிய நிலையில் தஞ்சையில் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தெருக்களில் புகுந்து வீணாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story