கொசு ஒழிப்பு பணி ஆய்வுக்கு சென்ற அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை


கொசு ஒழிப்பு பணி ஆய்வுக்கு சென்ற அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Nov 2017 5:14 AM IST (Updated: 19 Nov 2017 5:14 AM IST)
t-max-icont-min-icon

கொசு ஒழிப்பு பணி ஆய்வுக்கு சென்ற அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி நேதாஜி நகரில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் குடோன்கள் ஆகியவற்றில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையிலான குழுவினர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் பொதுமக்களிடம் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், சேமித்து வைக்கப்படும் குடிநீரை மூடி வைக்கும்படி கூறினார்.

பின்னர் செட்டியப்பனூரில் உள்ள வன்னிய அடிகளார் நகருக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஒரு பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதியையும், அதே பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியையும் ஆய்வு செய்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு, பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கழிவுநீர் கால்வாய் உடனடியாக அமைத்து தரவும் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் உறுதி அளித்தார்.

ஆய்வின்போது ஆணையாளர் கோபு, சுகாதார ஆய்வாளர் அலி, சமூக சேவகர் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story