முடித்திருத்தம் செய்பவர்கள் குறித்து சர்ச்சை கருத்து முதல்– மந்திரி மன்னிப்பு கேட்டார்


முடித்திருத்தம் செய்பவர்கள் குறித்து சர்ச்சை கருத்து முதல்– மந்திரி  மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:19 AM IST (Updated: 20 Nov 2017 4:19 AM IST)
t-max-icont-min-icon

முடித்திருத்தம் செய்பவர்கள் குறித்து பேசிய சர்ச்சை கருத்திற்காக முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மும்பை,

முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 9–ந்தேதி புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், கடந்த ஆட்சியில் எல்லா திட்டங்களும் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசும்போது:–

முடித்திருத்தம் செய்பவர்கள் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது, வந்தவர்கள் திரும்பி போய்விடாமல் இருப்பதற்காக ஒருவருக்கு பாதி தாடியை சவரம் செய்துவிட்டு, மற்றொருவருக்கு தலையில் பாதி முடியையும் வெட்டி வைப்பர். அதுபோல கடந்த அரசு பல திட்டங்களை தொடங்கி பாதியில் விட்டுச்சென்று விட்டது. இதனால் ஒப்பந்ததாரர்கள் தங்கள் வீட்டையும், பணப்பையையும் பணத்தால் நிரப்பிக்கொண்டனர்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

முதல்– மந்திரியின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. உஸ்மனாபாத் உள்ளிட்ட மாநிலத்தின் சில பகுதிகளில் முடித்திருத்தம் செய்யும் தொழிலாளிகள் முதல்– மந்திரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்கள் குறித்து கூறிய கருத்திற்கு முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Next Story