வதந்திகளை நம்ப வேண்டாம் கர்நாடகத்தில் மதுவிலக்கு இல்லை
கர்நாடகத்தில் மதுவிலக்கு என்பது இல்லை என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
மங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். கர்நாடகத்தில் மதுவிலக்கு இல்லை. மதுவிலக்கு கொண்டு வரப்படுவதற்கான கோரிக்கையும் இல்லை. அதாவது இதுவரை யாரும் கர்நாடகத்தில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. அதனால் மதுவிலக்கு குறித்து பேசுவது அர்த்தமற்றது. அதுபோன்ற எண்ணமும் அரசுக்கு கிடையாது.
தனியார் மருத்துவமனைகளுக்கான சட்ட திருத்த மசோதாவில் டாக்டர்களின் பிரதிநிதிகள் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன. இதனால் நாளை(அதாவது இன்று) தனியார் மருத்துவமனைகளுக்கான சட்ட திருத்த மசோதா பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.அந்த சட்ட திருத்த மசோதா நிறைவேறினால் அது மாநில மக்களுக்குத்தான் வெற்றி.
மாநிலத்தில் சுமார் 7 கோடி மக்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும். என் மீது பா.ஜனதாவினர் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இதற்கு எல்லாம் அடுத்த ஆண்டு(2018) நடைபெற உள்ள தேர்தலில் மக்கள் தீர்மானம் எடுப்பார்கள்.Related Tags :
Next Story