வணிக நிறுவனங்கள் வியாபாரத்தில் பரிசு, சலுகை திட்டங்களை அறிவிக்க கூடாது
வணிக நிறுவனங்கள் வியாபாரத்தில் சீட்டு, கூப்பன் திட்டங்கள், பரிசு, சலுகை திட்டங்களை செயல்படுத்த கூடாது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு பரிசு, குலுக்கல், சலுகை திட்டங்களை நடத்துகிறார்கள்.
பரிசு திட்டங்கள் மூலம் பொருட்களின் விலையை கூட்டி விற்பது, தரமற்ற பொருட்களை விற்பது, அளவு குறைப்பது, கலப்பட பொருட்கள் மற்றும் பழைய இருப்பு உள்ள பொருட்களை விற்பனை செய்வது போன்ற செயல்கள் மூலம் நுகர்வோர்கள் வணிகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நுகர்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் தனிநபர், விற்பனை கூடங்கள், வணிக நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தில் சீட்டு, கூப்பன் திட்டங்கள், குலுக்கல் திட்டங்கள், பரிசு திட்டங்கள், சலுகை திட்டங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. மீறினால் தமிழ்நாடு பரிசுத்திட்டங்கள் (தடுப்பு) சட்டம் 1979-ன்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story