கோவையில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் சாவு
கோவையில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதே போல் குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தை சேர்ந்தவர் இப்ராகிம். இவருடைய மனைவி ஹயருன்னிஷா. இவர்களுடைய மகன் உமர்சித்திக் (வயது 8). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
உடனே உமர் சித்திக் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்கு அவருடைய ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அலி அக்பர் (20). கட்டிட தொழிலாளி. இவர் கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். உடனே அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை அலி அக்பருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதன்காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் திடீரென்று மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறும் போது, ‘அலி அக்பருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு இருந்துள்ளது. அது சாதாரண காய்ச்சல் என்று நினைத்து மேற்கொண்டு சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். அவர் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்‘ என்றனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே அண்டூர், வெண்டலிகோட்டையை சேர்ந்தவர் துரை. இவர் ஆற்றூரில் சலூன்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஸ்ரீஹரிணி (9). திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவள் குலசேகரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ரீஹரிணி பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story