ஜனவரி மாதத்திற்குள் புதிதாக அறிவிக்கப்பட்ட 50 தாலுகாக்கள் செயல்பட தொடங்கும்


ஜனவரி மாதத்திற்குள் புதிதாக அறிவிக்கப்பட்ட 50 தாலுகாக்கள் செயல்பட தொடங்கும்
x
தினத்தந்தி 21 Nov 2017 4:30 AM IST (Updated: 21 Nov 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

ஜனவரி மாதத்திற்குள் புதிதாக அறிவிக்கப்பட்ட 50 தாலுகாக்கள் செயல்பட தொடங்கும் என்று சட்டசபையில் மந்திரி காகோடு திம்மப்பா கூறினார்.

பெலகாவி,

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் கே.ஜி. போப்பையா, அப்பச்சு ரஞ்சன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் புதிதாக 50 தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே மாநில அரசு அறிவித்தது. இந்த 50 தாலுகாக்கள் ஜனவரி மாதத்திற்குள் செயல்பட தொடங்கும். இதற்காக நிதி மற்றும் இதர வசதிகள் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக 50 தாலுகாக்கள் அமைக்கப்பட்டாலும், இன்னும் புதிய தாலுகாக்கள் வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய தாலுகாக்களை அமைக்கும்போது, இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு காகோடு திம்மப்பா கூறினார்.

முன்னதாக பேசிய சில உறுப்பினர்கள் கலசா, முன்னாள் துணை ஜனாதிபதி ஜத்தி பிறந்த ஊரான சாவலகியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உறுப்பினர் ராஜீவ், ஹாரோகெரேவை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உறுப்பினர் பிள்ளமுனிசாமியப்பா, விஜயாபுரா தாலுகாவை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், புதிய தாலுகாக்கள் அமைக்கப்படும்போது, இதுபற்றி பரிசீலிப்பதாக மந்திரி உறுதியளித்து உள்ளார். அதனால் இதுபற்றிய விவாதத்தை இத்துடன் முடிப்போம் என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

Next Story