கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வழங்கிய தொகையை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் மனு
பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வழங்கிய தொகையை மீட்டு தரக்கோரி கலெக்டர் சாந்தாவிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில்தொடங்க கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 323 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முகம்மதுபட்டினம், பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியை ஒட்டியுள்ள கல்குவாரியில் அபாயகரமான வெடிகளை வைத்து பாறையை தகர்ப்பதால் ஊருக்குள் அதிர்வு ஏற்படுகிறது. இந்த சத்தத்தின் மூலம் மக்களின் இரவு தூக்கமும் கெடுகிறது. பாறையிலிருந்து சிதறும் வெடிமருந்து பொருளானது புற்களின் மீது படுவதால் அதனை தின்கிற கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டதால் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாட வாய்ப்பிருக்கிறது. எனவே கல்குவாரி ஒப்பந்தத்தை மேலும் நீட்டிப்பு செய்யாமல் அதனை அப்படியே விட்டுவிட வேண்டும். அப்போது தான் விவசாய தொழிலாளர்களாகிய நாங்கள் பிழைப்பு நடத்த முடியும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள கீழப்பெரம்பலூர் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததால் குப்பைகள் சூழ்ந்து கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. நீண்ட நாட்களாக கழிவுநீர் வெளியேராததால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்களின் உற்பத்திக்கூடமாகவும் இது மாறிவிட்டது. இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தி சீராக கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் நொச்சியம் அருகேயுள்ள செல்லியம்பாளையம் வடக்குதெரு மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள வேங்கையான் குட்டை மற்றும் அதன் வரத்து வாய்க்காலில் ஆக்கிரமிப்பினை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சின்னாறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 1,000 பேர் வசித்து வருகிறோம். விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வரும் நாங்கள் கறவை மாடுகளையும் வளர்த்து பால் உற்பத்தி செய்து தனியார் பால்பண்ணைக்கு கொடுத்து வருகிறோம். பண்ணைக்கு சென்று பாலை கொடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே எங்கள் பகுதியில் அரசு பால்பண்ணை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிட்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள வாலிகண்டபுரம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள முஸ்லிம் தெருவில் மின்கம்பங்களில் மின்விளக்கு சேதமடைந்து உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும். பள்ளிவாசலுக்கு செல்லும் வீதியின் முன்புறம் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக இருக்கிறது. இதனால் மூக்கை பிடித்து கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள எசனை, பூஞ்சோலை, தொண்டமாந்துறை, அன்னமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், அன்னமங்கலத்திலுள்ள எலிசபெத் எஜூகேசனல் சொசைட்டி என்கிற கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதன் உரிமையாளர்கள் எங்களிடம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பல தொகைகளில் பணம் பெற்றனர். ஆனால் முதிர்வு தேதி முடிந்து நீண்ட நாட்களாகியும் அந்த பணத்தை திருப்பி தராமல் இழுத்தடிக்கின்றனர். எனவே எங்களது பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கிளியப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரவி கொடுத்த மனுவில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமியிடம் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.75 ஆயிரம் பணம் பெற்று நிலத்தை அடமானம் வைத்தேன். தற்போது உடன்படிக்கைக்கு மாறாக அதிக வட்டி கேட்டு அவர் தொந்தரவு செய்கிறார். எனவே இது குறித்து கந்துவட்டி தடை சட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற கலெக்டர் சாந்தா, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இந்த கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) உமாமகேஸ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்-தணிக்கை) பாலன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story