பயிர் இழப்பீட்டு தொகை ரூ.458 கோடி வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் மணிகண்டன் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ.458 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் 64-வது கூட்டுறவு வாரவிழா ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அன்வர்ராஜா எம்.பி., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன் வரவேற்று பேசினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ஜெயராமன் திட்ட அறிக்கை வாசித்தார்.
விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் பரிசு வழங்கியும் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் இழப்பீட்டு தொகை ரூ.458 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திருவாடானை பிர்க்காவில் சில பகுதிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை எளிதாக சந்திக்க முடிவதால் இந்த மாவட்டத்தின் மக்களுக்காக கோரிக்கைகளை கொண்டு சென்றால் உடனடியாக செய்து கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட மிகச்சிறந்த முதல்-அமைச்சராக திகழ்ந்து வருகிறார்.
தற்போது எந்த பிரச்சினை நடந்தாலும் முன்னாள் முதல்-அமைச்சரை நினைக்கும் அளவிற்கு அவர் நம் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அவர் விட்டுச்சென்ற ஆட்சியை நாம் பாதுகாத்து கொண்டிருக்கிறோம். ஏழை-எளிய மக்களுக்காக உதவி செய்து வருகிறோம். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தண்ணீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து எனது கோரிக்கையை ஏற்று 7,000 கன அடி தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் காரணமாக இன்னும் 6 மாத காலத்திற்கு தண்ணீர் பிரச்சினையே இருக்காது. மீனவர்களின் 18 படகுகள் இலங்கையில் சேதமடைந்துவிட்டன. அந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு எனது முயற்சியால் தலா ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை கூட்டு உறவோடு சேர்ந்து இந்திய வரலாற்றில் பேசப்படக்கூடிய அளவிற்கு அதிலும், எந்த மாவட்டமும் இந்த அளவிற்கு நடத்தவில்லை என்று கூறும் அளவிற்கு மிகச்சிறப்பாக நடத்தி சாதனை படைக்க வேண்டும். அந்த அளவிற்கு இந்த நூற்றாண்டு விழாவை திருவிழா போல் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ராம்கோ தலைவர் செ.முருகேசன், நகர வங்கிகளின் இயக்குனர் ராமமூர்த்தி, கூட்டுறவு வீட்டுவசதி இணைய நிர்வாக குழு உறுப்பினர் சாமிநாதன், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு சம்மேளனம் தலைவர் பாலசிங்கம், முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், கமுதி அழகு சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சரக துணை பதிவாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story