பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2017 3:30 AM IST (Updated: 22 Nov 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜராஜசோழன். இவரது மனைவி நிவேதா (வயது 26). இவர் கழுவன்தோண்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பறக்கும் படை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது, சரக்கு குறைவாக இருந்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்களின் அரியலூர் மண்டல இணைப்பதிவாளர் தயாளன், நிவேதாவை பணியிடைநீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து, வேலையில்லாமல் வீட்டில் இருந்த நிவேதா மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிவேதாவின் தாய்மாமன் இளமதி (60) கொடுத்த புகாரின் பேரில், உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story