ஜல்லிக்கட்டில் பங்கேற்று காலை இழந்தவர் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி


ஜல்லிக்கட்டில் பங்கேற்று காலை இழந்தவர் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 22 Nov 2017 3:15 AM IST (Updated: 22 Nov 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டம், ஒதுக்கூரைச் சேர்ந்த தேவராசன்.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம், ஒதுக்கூரைச் சேர்ந்த தேவராசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், விராலிமலை செங்கலக்குடி கிராமத்தில் 24.3.2017–ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்றேன். இதில் மாடு பிடிக்க முயன்றபோது எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ரத்த ஓட்டம் இல்லாததால் எனது இடது கால் அகற்றப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு அதிகாரிகள் முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால் நான் ஒரு காலை இழந்திருக்கமாட்டேன். இதனால் எனக்கு 50 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, சொந்த விருப்பத்தின்பேரில் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுவிட்டு, இப்போது இழப்பீடு கோருவதை ஏற்க முடியாது என்றும், சிகிச்சைக்கான உதவிகளை செய்ய தனியாக மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story