தூக்குப்போட்டு பெண் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம்
இளம்பிள்ளை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சேலத்தில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இளம்பிள்ளை,
இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் அந்த பகுதியில் மெக்கானிக் பட்டறை வைத்துள்ளார். இவருக்கும், எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி கிராமம் செவிடனூர்காட்டுவளவு பகுதியை சேர்ந்த ராமசாமி-மாரியம்மாள் தம்பதியின் மகள் சத்யாவுக்கும்(வயது 30) கடந்த 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஷர்மிளா (11) என்ற மகளும், முகுந்தன் (4) என்ற மகனும் உள்ளனர்.
குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இது தொடர்பாக குமாருக்கும், அவரது மனைவி சத்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சத்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் விட்டத்தில் அவர் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சத்யா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் விரைந்து சென்று சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு இருப்பாளி கிராமம் செவிடானூர் காட்டுவளவு கிராமத்தில் இருந்து, சத்யாவின் பெற்றோர் ராமசாமி, மாரியம்மாள் ஆகியோர் உறவினர்களுடன் வந்தனர். ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் திரண்ட அவர்கள் கதறி அழுதனர். சத்யாவின் உடலில் காயம் இருப்பதாகவும், எனவே, அவரது சாவில் மர்மம் உள்ளது என்றும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறினர்.
சேலம் கலெக்டர் அலுவலக ரவுண்டானாவில் திரண்ட அவர்கள், மாலை 5.45 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது சத்யா தற்கொலை செய்யவில்லை என்றும், அவளது சாவில் சந்தேகம் உள்ளது என்றும் கூறி கதறினர். தகவல் அறிந்து சேலம் டவுன் போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப் படுத்தினர்.
பின்னர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சத்யாவின் பெற்றோர் புகார் மனு ஒன்றையும் கொடுத்தனர். அந்த மனுவில், சத்யாவை கொன்றதுபோலவே, குழந்தைகள் ஷர்மிளா, முகுந்தன் ஆகியோரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள் என்றும், எனவே, சத்யாவின் சாவில் உள்ள மர்மத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். உடலை வாங்க மறுத்ததால், சத்யாவின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப் பட்டுள்ளது.

Related Tags :
Next Story