கடலூரில் மகள் தற்கொலை செய்ததால், மனம் உடைந்த தாயும் தூக்குப்போட்டு சாவு
கடலூரில் மகள் தற்கொலை செய்ததால், மனம் உடைந்த தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்,
துரைராஜின் தம்பி ராஜவேலு அரிசி பெரியாங்குப்பம் எவரெஸ்ட் நகரில் வசிக்கிறார். அவர் அவ்வப்போது பாதிரிக்குப்பத்துக்கு சென்று தனது அண்ணி மற்றும் அண்ணன் மகளுக்கு உதவிகள் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு திடீரென ராஜவேலுவின் மனைவி இறந்து விட்டார். இதனால் அவரது 2 குழந்தைகளை கவனிப்பதற்காக சைலஜா அரிசிபெரியாங்குப்பத்தில் உள்ள தனது சித்தப்பா ராஜவேலு வீட்டுக்கு சென்று தங்கினார். இது சரஸ்வதிக்கு பிடிக்கவில்லை. இதனால் வேலைக்குப்போகாமல் அங்கேயே இருக்கிறாயே? எனக்கூறி மகளை திட்டினாராம்.
தாய் திட்டியதால் மனம் உடைந்த சைலஜா நேற்று முன்தினம் காலையில் தனது சித்தப்பா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் பாதிரிக்குப்பத்தில் இருந்த தாய் சரஸ்வதிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் அவர் மனவேதனை அடைந்தார். நான் திட்டியதால் தானே மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று மனம் உடைந்து அழுத சரஸ்வதி துக்கம் தாளாமல் அவரும், வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நடந்தது.
ஒரே நாளில் அடுத்தடுத்து மகளும், தாயும் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சம்பத், சம்பவ இடத்துக்கு சென்று தாய்–மகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இவ்விரு சம்பவங்கள் பற்றி ராஜவேலு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.