லாரி மீது மினி லாரி மோதல் ரசாயன பவுடர் சாலையில் கொட்டி போக்குவரத்து பாதிப்பு


லாரி மீது மினி லாரி மோதல் ரசாயன பவுடர் சாலையில் கொட்டி போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2017 4:15 AM IST (Updated: 22 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே லாரி மீது மினி லாரி மோதல் ரசாயன பவுடர் சாலையில் கொட்டி போக்குவரத்து பாதிப்பு

ஓமலூர்,

மேட்டூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து ரசாயன பவுடர் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஓமலூர் வழியாக தாரமங்கலம் நோக்கி சென்றது. ஆட்டுக்காரனூர் வளைவில் சென்றபோது எதிரே வந்த மினிலாரியின் பின்பகுதியில் ரசாயன பவுடர் லாரி மோதியது. இதில் மினிலாரி நிலைதடுமாறி ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து வயல்வெளிக்குள் புகுந்தது.

இதேபோல ரசாயன பவுடர் ஏற்றிவந்த லாரியின் தார்பாய் கிழிந்து ரோடு முழுவதும் ரசாயன பவுடர் கொட்டியது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்ததோடு, அரை மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓமலூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story