டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 8:30 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.ராமன் நேற்று திடீரென டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்

குடியாத்தம்,

குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.ராமன் நேற்று திடீரென டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தொட்டியில் டெங்கு கொசுப்புழு இருப்பதை கண்டறிந்து வீட்டின் உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தார்.

அதைத் தொடர்ந்து ராஜக்கல் குள்ளப்பன் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான கொண்டசமுத்திரம் ஊராட்சி வள்ளலார் நகர் பகுதி மற்றும் பள்ளிகளில் ஆய்வு செய்தார்.


Next Story