ரெயில்வே அதிகாரி மீது பாலியல் தொந்தரவு புகார் கொடுத்த 18 பெண் தொழிலாளர்கள் இடமாற்றம்
ரெயில்வே அதிகாரி மீது பாலியல் தொந்தரவு புகார் கொடுத்த 18 பெண் தொழிலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து பெற்றோர், கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்து உள்ளனர்.
திருச்சி,
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரெயில்வே முதுநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் மணிவண்ணன். இவருடைய கட்டுப்பாட்டில் பெண் தொழிலாளர்கள்(கேங்க் உமன்) 18 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பணி ஒதுக்கீடு, விடுமுறை அளிப்பது போன்ற அதிகாரங்கள் பொறியாளர் மணிவண்ணனிடம் உள்ளது. இந்தநிலையில் விடுமுறை கேட்டு செல்லும் பெண்களுக்கு மணிவண்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பபிதா என்ற பெண் தொழிலாளர் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
அவரை தொடர்ந்து 18 பெண்களும் ஒன்று சேர்ந்து மணிவண்ணன் மீது ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மயிலாடுதுறைக்கு சென்று புகார் கூறிய பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதன்அடிப்படையில் மணிவண்ணன் கடந்த 19-ந் தேதி மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் புகார் கொடுத்த 18 பெண் தொழிலாளர்களும் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் பெண் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்டித்து பெண் தொழிலாளர்கள் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளரிடம் புகார் கொடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் விடுப்பு கேட்டபோது, அவர்களுக்கு விடுப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பெண் தொழிலாளர்கள் சார்பில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் நேற்று காலை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து பெண் தொழிலாளர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்காமல் அநீதி வழங்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அவரை அருகே உள்ள பட்டுக்கோட்டைக்கு மாற்றம் செய்தது ஒரு தண்டனையே கிடையாது. மேலும், புகார் கொடுத்த 18 பெண் தொழிலாளர்களையும் திருச்சி கோட்டத்துக்குள் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்“ என்றனர்.
இந்தநிலையில் பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பொறியாளர் மணிவண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கத்தினர் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உதவி பொதுச்செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
இதில் கோட்ட தலைவர் சுகுமாறன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சம்பத், டி.ஆர்.இ.யு. நிர்வாகிகள் மாதவன், மொய்தீன் உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story