சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மந்திரிகளுக்கு ஆர்வம் இல்லையா? ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி


சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மந்திரிகளுக்கு ஆர்வம் இல்லையா? ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி
x
தினத்தந்தி 23 Nov 2017 4:00 AM IST (Updated: 23 Nov 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மந்திரிகளுக்கு ஆர்வம் இல்லையா? என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெலகாவி,

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மந்திரிகளுக்கு ஆர்வம் இல்லையா? என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்வம் இல்லையா?

கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியபோது மந்திரிகள் அமரும் முன்வரிசையில் இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தன. பின் வரிசையில் மந்திரிகள் எச்.கே.பட்டீல், கிருஷ்ண பைரேகவுடா, பசவராஜ் ராயரெட்டி, கீதா மகாதேவ பிரசாத் ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

இதை கவனித்த எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து, “சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க மந்திரிகளுக்கு ஆர்வம் இல்லையா?. நிலைமை இவ்வாறு இருந்தால் என்ன செய்வது?. மந்திரிகளே சபைக்கு வராதபோது எம்.எல்.ஏ.க்கள் எப்படி வருவார்கள்?“ என்று கூறி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சட்டசபை கூட்டமே நடைபெறவில்லை

இதற்கு பதிலளித்த மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, “மந்திரிகள் வரவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் சட்டசபை கூட்டமே நடைபெறவில்லை“ என்று கூறினார். அப்போது சபாநாயகர் கே.பி.கோலிவாட், சபையில் இருக்க வேண்டிய மந்திரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வாசித்தார்.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மந்திரியாக சபைக்கு வரத்தொடங்கினர். அத்துடன் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து சபாநாயகர், மந்திரிகள் ரமேஷ்குமார், பிரியங்க் கார்கே ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அடுத்த நிகழ்வுக்கு சென்றார்.


Next Story