நெல்லை மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
கிராம பஞ்சாயத்தில் பணியாற்றும் பஞ்சாயத்து செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் அனைத்து யூனியன் அலுவலகத்திலும் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், கடையம், சேரன்மாதேவி, கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை, மேலநீலிதநல்லூர், குருவிகுளம், ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, அம்பை, சங்கரன்கோவில், பாப்பாக்குடி, ஆலங்குளம், வள்ளியூர், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 19 யூனியன்களிலும் மொத்தம் 425 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த 425 கிராம பஞ்சாயத்துகளிலும் பணியாற்றக்கூடிய பஞ்சாயத்து செயலாளர்கள் நேற்று பணியை புறக்கணித்துவிட்டு யூனியன் அலுவலகத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள், ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட 30 கிராம பஞ்சாயத்துகளின் செயலாளர்களும் நேற்று பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்திற்கு வந்து தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் முத்துக்குட்டி தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர நாராயணன், ஆண்டாள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் குமரேசன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிராம பஞ்சாயத்தில் தலைவர்கள் தற்போது இல்லாததால், அனைத்து பணிகளையும் செயலாளர்களே கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பஞ்சாயாத்து பகுதியில் நடைபெறுகின்ற டெங்கு ஒழிப்பு பணி, சுகாதார பணிகள், குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு பணி மற்றும் வரி வசூல் பணி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Related Tags :
Next Story