கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 47 ஊராட்சிகள் உள்ளன. இதில் சேங்கனூர், புத்தூர், கடிச்சம்பாடி, கொத்தங்குடி, தேனாம்படுகை, உத்தமதானி ஆகிய 6 ஊராட்சிகளில் செயலாளர்கள் இல்லாமல் இந்த ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பணியாற்றிவரும் செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். அந்த ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மற்ற அலுவலர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு 11 சங்கங்களை உள்ளடக்கிய ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்கோதை, ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 13 பெண்கள் உள்பட மொத்தம் 68 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 48 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும். இந்த ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அப்போது பொதுமக்கள் யாரும் அலுவலகத்தின் உள்ளே வராத வகையில் நுழைவு வாயிலில் முன்பு தராசு ஒன்றை கட்டி தொங்க வைத்தனர். அதில் ஒருபுறம் பணிச்சுமை, மற்றொரு புறம் ஊதியம் என எழுதி வைத்து பணிச்சுமைக்கேற்ற ஊதியம் வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக வழக்கமான பணிகள் எதுவும் நடைபெறாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Related Tags :
Next Story