மழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க 125 இடங்களில் கண்காணிப்பு குழுக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
நெல்லை மாவட்டத்தில், மழை பாதிப்பில் இருந்து பொது மக்களை மீட்க 125 இடங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
நெல்லை,

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கண்காணிப்பு குழுக்கள்
நெல்லை மாவட்டத்தில், அதிக மழை பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பகுதியாக 125 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இங்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 125 இடங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இதுதவிர மழையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முக்கூடல் மற்றும் ராதாபுரம் தாலுகா உவரி ஆகிய இடங்களில் மழையால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்கள் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
200 மின்கம்பங்கள்
நெல்லை மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைந்து உள்ளது. மாவட்டத்தில் பெய்த பலத்த மழைக்கு பல்வேறு இடங்களில் 50 மரங்கள் சாய்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தின. 200 மின் கம்பங்களும் சேதம் அடைந்து உள்ளன. சாய்ந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதே போல் மின் கம்பங்களும் உடனடியாக சரிசெய்யப்பட்டு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
நெல்லை மாவட்டத்தில் ஒருசில அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளைக்குள் நிரம்பி விடும். சேர்வலாறு அணையில் இருந்து பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விட்டால், அதற்கு முன்பாக பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்படும். அவ்வாறு எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகே அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும்.
24 மணி நேரமும்...
தாலுகா வாரியாக அந்தந்த தாசில்தார் தலைமையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மழை சேதம் குறித்து பொதுமக்கள் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். வானிலை ஆய்வு மையம் 24 மணி நேரம் மழை பெய்யும் என்று அறிவித்து உள்ளது. இதனால் மழை பாதிப்பு ஏற்படும் பகுதியில் மீட்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Related Tags :
Next Story