பணகுடி நான்கு வழிச்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் மோட்டார் சைக்கிளில் வந்தவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு
பணகுடி நான்கு வழிச்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வள்ளியூர்,
பணகுடி நான்கு வழிச்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நான்கு வழிச்சாலையில் வெள்ளம்
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று ம் நீடித்தது. பணகுடி நான்கு வழிச்சாலையை ஓட்டி அனுமன் ஓடை உள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் இந்த ஓடையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று மாலை 5.30 மணி அளவில் இந்த வெள்ளம் பணகுடி நான்கு வழிச்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை–நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற வாகனங்கள், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் அனுமன் ஓடையில் ஏற்பட்ட வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இந்த சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் போது, அனுமன் ஓடை பகுதியில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, ஏற்பட்ட வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் யார் என்று தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பணகுடியைச் சூழ்ந்த வெள்ளம்
மேலும் அனுமன் ஓடையில் ஏற்பட்ட வெள்ளம் பணகுடி ஊருக்குள் புகுந்தது. போலீஸ் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பணகுடி ஊருக்கு மேற்கே வீரபாண்டியன்குளம் நிரம்பி உள்ளது. இதனால் அந்த குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் குமந்தானூரில் உள்ள சப்பாத்தி ஓடையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குமந்தானூர் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் 50 வீடுகளில் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினார்கள்.
பணகுடி ஊருக்கு தெற்கே உள்ள புன்னியவளான்புரத்தில் குடியிருப்புகளை சுற்றி அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கினார்கள்.
பாலம் உடைந்தது
நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரம்–ஆவாரந்தலை ரோட்டில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Related Tags :
Next Story