ரெட்டியார்பாளையத்தில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது
புதுவை ரெட்டியார்பாளையத்தில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை ரெட்டியார்பாளையம் மேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலதி (வயது 29) புதுவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 26-ந் தேதி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மாலதி வந்தார். பின்னர் தனது நகையை கழற்றி வீட்டு பீரோவில் வைத்தார். ஆனால் பீரோ சாவியை அதிலேயே வைத்து விட்டார். இவர் வேலைக்கு செல்லும் போது தனது வீட்டின் சாவியை வீட்டு கதவின் அருகில் வைத்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டு பீரோவில் இருந்து 6 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 கிராம் எடையுள்ள 2 வெள்ளி காசுகளை காணவில்லை. இது குறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாலதி வசிக்கும் வீட்டின் மாடி வீட்டில் வசித்து வந்த மதிவாணன் என்பவரது மகன் ஜெயக்குமார் (32) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மாலதியின் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
மாலதி வேலைக்கு செல்லும் போது வீட்டு கதவை பூட்டி சாவியை கதவின் மேலே வைத்து செல்வதை பார்த்துள்ளார். எனவே அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து 6 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நாணயங்களை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி நாணயங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
குற்றவாளியை உடனடியாக கைது செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசாருக்கு வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் பாராட்டு தெரிவித்தார்.

Related Tags :
Next Story