பணகுடியில் அடகு கடையின் கதவை உடைத்து 80 பவுன் நகைகள் கொள்ளை போலீசார் விசாரணை
பணகுடியில் அடகு கடையின் கதவை உடைத்து 80 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பணகுடி,
பணகுடியில் அடகு கடையின் கதவை உடைத்து 80 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடகு கடை
நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் குமார் (வயது 60). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடையில் சுஜி (22) என்ற பெண் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
வள்ளியூர் கோர்ட்டில் நடக்கும் ஒரு வழக்கில் முன்ஜாமீன் பெறுவது தொடர்பாக குமார் அலைந்து கொண்டு இருந்தார். இதனால் அவரால் அடகு கடையை சரியாக திறந்து நடத்த முடியவில்லை. இவர், கடையில் இருக்க முடியாததால், பெண் ஊழியர் சுஜிக்கு விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார். வீட்டை பூட்டி விட்டு, முன்ஜாமீன் பெறுவதற்காக கடந்த 14–ந்தேதி குமார் நெல்லை வந்தார். பின்னர் அவர் ஒரு பிரபல வக்கீலை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் நெல்லையில் தங்கி விட்டார். ஜாமீன் கிடைப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தது.
80 பவுன் நகைகள் கொள்ளை
இதைத்தொடர்ந்து குமார் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குமார் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 80 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமிரா
கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 14–ந்தேதி மர்மநபர்கள் முகமூடி அணிந்து பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் கையுறை அணிந்து பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இந்த கேமிராவில் பதிவான மர்மநபர்களின் உருவம் பழைய குற்றவாளிகளின் உருவத்துடன் ஒத்துப்போகிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த கடைக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கடையில் மோப்பம் பிடித்துவிட்டு மெயின்ரோடு வரை ஓடி சென்று மீண்டும் கடைக்கு திரும்பி வந்தது. அது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். அடகு கடையின் கதவை உடைத்து 80 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story