உவரி பேரிடர் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள மீனவர்களுக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்


உவரி பேரிடர் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள மீனவர்களுக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்
x
தினத்தந்தி 2 Dec 2017 3:00 AM IST (Updated: 1 Dec 2017 9:26 PM IST)
t-max-icont-min-icon

உவரி பேரிடர் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள மீனவர்களுக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல் கூறினார்.

திசையன்விளை,

உவரி பேரிடர் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள மீனவர்களுக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல் கூறினார்.

பாதுகாப்பு மையத்தில் மீனவர்கள்

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. உவரியிலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. உவரி கடலில் 20 அடி உயரத்துக்கு மேல் ராட்சத அலைகள் எழுந்தன.

இதனால் உவரி கடலோர தாழ்வான பகுதியில் வசித்து வரும் மீனவ குடும்பத்தினர், பேரிடர் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் படுக்கை வசதிகள் அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

அமைச்சர் ஆறுதல்

இந்த நிலையில், பாதுகாப்பு மையத்தில் உள்ள மீனவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று மாலை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மீனவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, இன்பதுரை எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் ஆகாஷ், பயிற்சி கலெக்டர் இளம்பகவத், திட்ட அலுவலர் பழனி, உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், ராதாபுரம் தாசில்தார் ரவிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் குமார், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story