திண்டுக்கல் பேகம்பூரில் 6–ந்தேதி த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட த.மு.மு.க. ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட த.மு.மு.க. ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் நஜிபுர்ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் யாசர்அராபத் வரவேற்றார். துணை செயலாளர் ஷேக்பரித் நீதிபோதனை வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் நைனா முகமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அன்சர்மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், பாபர் மசூதி இடிப்பு தினமான வருகிற 6–ந்தேதி பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் பொருத்த அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story