திருவோணத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்


திருவோணத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Dec 2017 4:00 AM IST (Updated: 2 Dec 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

திருவோணத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

திருவோணம்

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் நெய்வேலியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், ஒன்றிய செயலாளர் ராமசாமி, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

நெய்வேலியில் இருந்து வா.கொல்லைக்காடு, பெரியகோட்டைக்காடு, தோப்பநாயகம், திப்பன்விடுதி, வெட்டுவாக்கோட்டை, ஊரணிபுரம், திருவோணம் வழியாக ஒரத்தநாட்டிற்கு புதிதாக அரசு பஸ் இயக்க வேண்டும். நெய்வேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான டாக்டர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும். மேலும், தட்டுப்பாடின்றி மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும். திருவோணத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வகணேஷ் நன்றி கூறினார்.


Next Story