உஷாரய்யா உஷாரு!
மகிழ்ச்சியாக விடிந்தது அந்த காலைப் பொழுது. வழக்கம்போல உடற்பயிற்சியில் ஈடுபட்டார் அவர்.
மகிழ்ச்சியாக விடிந்தது அந்த காலைப் பொழுது. வழக்கம்போல உடற்பயிற்சியில் ஈடுபட்டார் அவர். பள்ளியொன்றின் உடற்கல்வி ஆசிரியரான அவர், பணிக்கேற்ற திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்டவர்.
அவரது பள்ளி மாணவர்கள் அணி, பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி இருந்தது. அந்த உற்சாகம் அவரை அதி காலையிலே விழிக்கச் செய்திருந்தது. உடற்பயிற்சி செய்துவிட்டு, அந்த வேகத்திலே போட்டி நடைபெறும் மைதானத்திற்கு சென்றார். தனது மாணவர்களுக்கு இறுதிகட்ட பயிற்சியளித்து, வெற்றிக்கான உத்வேகத்தை ஊட்டினார்.
அதே வேகத்தில் களத்தில் இறங்கிய அவரது அணி வெற்றி பெறவும் செய்தது. அவர் பணிக்குச் சேர்ந்த 2-ம் ஆண்டிலேயே பள்ளி கோப்பையை வென்றது அவருக்கு பெருமையாக இருந்தது. தலைமையாசிரியரும் வெகுவாகப் பாராட்டினார்.
அன்று சனிக்கிழமை. ஞாயிறு விடுமுறை. மறுநாள் திங்கட்கிழமை மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் அன்றைக்கும் சேர்த்து விடுமுறை கேட்டார். தலைமையாசிரியர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் விடுமுறைக்கு அனுமதியளித்தார். தனது பயிற்சியால் கிடைத்த முதல் வெற்றிக் கோப்பையை மனைவியிடம் காட்டிவிட்டு எடுத்து வருவதாக தலைமையாசிரியரிடம் கூறிவிட்டு, வீட்டிற்கு கிளம்பினார்.
பள்ளியில் இருந்து இரண்டரை மணி நேர பயண தூரத்தில் இருந்தது அவரது வீடு. தினமும் சென்று வருவது சிரமம் என்பதால், பள்ளி விடுதியிலேயே தங்கிக் கொண்டு வார இறுதியில் மட்டும் ஊருக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் அவர். அதற்காக அவரிடம் மோட்டார் சைக்கிள் இருந்தது.
தொடர்ச்சியாக விளையாட்டுப் போட்டிகள் நடந்து வந்ததால் அவரால் ஒரு மாதமாக வீட்டிற்கு செல்ல முடியவில்லை. இப்போது இறுதிப் போட்டியும் முடிந்துவிட்டது. வெற்றியும் கிட்டிவிட்டது. தொடர்ந்து மனைவியின் பிறந்த நாளும் வந்து விட்டதால் இரட்டை சந்தோஷத்தில் ‘பைக்’கில் வீட்டிற்கு கிளம்பினார். வெற்றிக்கோப்பையோடு, மனைவிக்காக வாங்கிய பரிசுப் பொருட்களையும் வைத்துக் கொண்டார். இன்ப அதிர்ச்சிகொடுக்க வேண்டும் என்பதற்காக ஊருக்கு வந்து கொண்டிருப்பதை அவர் மனைவிக்கு தெரிவிக்கவில்லை.
மாலை வேளை, நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். வெகுதூரம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. திடீரென ஒரு திருப்பத்தில் எதிரே வந்த வாகனம் மோத, தூக்கிவீசப்பட்டார். விபத்தை உணர்ந்ததும் மோதிய வாகனம் நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டது.
தூரத்தில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். அங்கே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் உடற்பயிற்சி ஆசிரியர். கால்நடை மேய்த்தவர்களிடம் செல்போன் எதுவும் இல்லை. அடிபட்டுக் கிடந்தவரின் அருகே போன் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்த அவர்களுக்கு, அந்த ஸ்மார்ட் போனை எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. போன் ‘லாக்’ செய்யப்பட்டிருந்தது. அவர்கள் செய்வதறியாமல் வெகுநேரம் தவித்த பின்பே அந்த வழியாக இன்னொரு கார் வந்தது. அதை நிறுத்தினார்கள். அவர்கள் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தார்கள்.
அதற்குள் அவர் அபாய கட்டத்தை அடைந்துவிட்டார். ஆம்புலன்சும், போலீசும் வந்து சேர்ந்தபோது அவர் இறந்துவிட்டார். அவர்களாலும் எளிதாக செல்போன் லாக்கை எடுத்து பேசமுடியவில்லை. அதனால் இறந்தவர் யார் என்று அடையாளம் தெரிவதில் தாமதமானது. கடைசியில் வெற்றிக் கோப்பையை பார்த்து, அந்த பள்ளிக்கு தொடர்புகொண்ட பின்பே இறந்தவர் யார் என்று அடையாளம் கண்டார்கள். தனது பிறந்த நாளில் கணவர் இறந்த செய்தி கேட்டு கதறியழுதார், மனைவி.
விபத்துகள் எந்த நேரத்தில்- எந்த விதத்தில் - யாருக்கு ஏற்படும் என்று தெரியாது. அதனால் ரகசியம் காப்பதாக நினைத்து உங்கள் செல்போனை ‘லாக்’ செய்து வைத்திருப்பது, ஆபத்து நேரத்தில் உங்கள் உயிரை காப்பதற்கு உதவாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
- உஷாரு வரும்.

Related Tags :
Next Story