விழிப்புணர்வு எழுத்துக்கள்
‘‘அன்றாடம் குப்பைகளும், கழிவுகளும் சேர்வது தவிர்க்க முடியாது. ஒருசில விஷயங்களை பின்பற்றினால் கழிவுகளையும், குப்பைகளையும் கட்டுப்படுத்தலாம்.
‘‘அன்றாடம் குப்பைகளும், கழிவுகளும் சேர்வது தவிர்க்க முடியாது. ஒருசில விஷயங்களை பின்பற்றினால் கழிவுகளையும், குப்பைகளையும் கட்டுப்படுத்தலாம். அவைகளை மறுசுழற்சி செய்தும் பயன்படுத்தலாம்’’ என்கிறார், பூஜா திங்க்ரா. கிராபிக்ஸ் டிசைனரான இவர் டெல்லியை சேர்ந்தவர். ஆங்கில எழுத்துக்களில் தன்னுடைய கற்பனை திறனையும், கிராபிக்ஸ் வரைகலையையும் புகுத்தி விழிப்புணர்வை உருவாக்குகிறார்.
சமையல் அறை கழிவுகளை மட்கவைத்து செடிகளுக்கு உரமாக பயன்படுத்தும் விதமாக ‘சி’என்ற ஆங்கில எழுத்தை வடிவமைத்திருக்கிறார். அதில் ‘‘சமையல் அறையில் 60 சதவீத கழிவுகளை எளிய முறையில் மறுசுழற்சி செய்துவிட முடியும். தினமும் ஈரப்பதமிக்க கழிவுகளை ஒரு கூடையிலும், உலர்ந்த மட்கும் தன்மை கொண்ட கழிவுகளை மற்றொரு கூடையிலும் பிரித் தெடுக்க வேண்டும். பின்னர் அவைகளை ஒரு பானையில் கொட்டி, உலர்ந்த இலைகளை போட்டு வைக்க வேண்டும். ஒரு மாத காலத்துக்குள் அவை மக்கி சத்தான ஊட்டச்சத்து மிக்க உரமாக மாறிவிடும்’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
வீட்டில் தோட்டம் அமைத்து மக்கிய உரங்களை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ‘ஜி’ எழுத்தை செடிகள் படர்ந்திருக்கும்படி உருவாக்கி இருக்கிறார். ‘‘ஒரே ஒரு பூந்தொட்டியில் செடி வளர்க்க ஆரம்பித்தாலே, வீட்டு தோட்டம் உருவாக்கும் ஆர்வம் துளிர்விட தொடங்கிவிடும். வீட்டில் ஆங்காங்கே செடிகள் வளர்த்து சமையலுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்துவிடலாம். சமையலுக்கு தேவைப்படும் நேரத்தில் உடனே செடிகளில் இருந்து பறித்து பயன்படுத்துவதால் சுவையாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்த்து, வீட்டு சமையலை சாப்பிடுவதுதான் உடல் நலனுக்கு நன்மை சேர்க்கும் என்பதை சித்தரிக்கும் விதமாக ‘இ’ எழுத்தை வடிவமைத்திருக்கிறேன். ‘நமது உடலுக்கு தேவை மென்று சாப்பிடுவதற்கு ஏற்ற உணவுவகைகளே. துரித உணவுகள் அல்ல’ என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்’’ என்கிறார்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ‘டி’ எழுத்தை குடிநீர் குழாயாக வரைந்திருக்கிறார். ‘‘பல் துலக்கும் போதும், பாத்திரங்கள் கழுவும்போதும் அநாவசியமாக தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். குழாயில் நீர் கசிவு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார்.
‘டபிள்யூ’ எழுத்து நடைப் பயிற்சியை வலியுறுத்துகிறது.
‘‘அதிக நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். ஏ.டி.எம். மையம், கடை, நண்பர் வீடு, பூங்கா என அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்லுங்கள். இல்லாவிட்டால் சைக்கிள், பொது வாகனங்களை பயன்படுத்துங்கள். சொந்த வாகனங்களை கூடுமானவரை தவிர்த்திடுங்கள். அவை காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வழிவகுக்கின்றன. வாகன புகையும், காற்று மாசுவும் உடல் நலக்குறைவை ஏற்படுத்துகின்றன’’ என்கிறார். பூஜா திங்க்ரா.

Related Tags :
Next Story