வில்லாக வளையும் உடல்


வில்லாக வளையும் உடல்
x
தினத்தந்தி 3 Dec 2017 2:26 PM IST (Updated: 3 Dec 2017 2:26 PM IST)
t-max-icont-min-icon

உடலை வில்லாக வளைத்து விதவிதமான யோகாசனங்களை செய்து ஆச்சரியப்பட வைக்கிறார், குஷி ஹேமச்சந்திரா. 9-ம் வகுப்பு மாணவியான இவர் மைசூரை சேர்ந்தவர்.

டலை வில்லாக வளைத்து விதவிதமான யோகாசனங்களை செய்து ஆச்சரியப்பட வைக்கிறார், குஷி ஹேமச்சந்திரா. 9-ம் வகுப்பு மாணவியான இவர் மைசூரை சேர்ந்தவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யோகாசனம் பயின்றவர் தேசிய, சர்வதேச அளவில் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார். வியட்நாமில் கடந்த ஆண்டு நடந்த ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் வென்று அசத்தி இருக்கிறார். கடினமான யோகாசன பயிற்சிகளையும் குஷி சுலபமாக செய்து விடுகிறார்.

‘நீராலம்பா பூரண சக்ராசனா’ என்ற உடலை பின்னோக்கி வளைக்கும் யோகாசனத்தை செய்வதில் உலக சாதனையும் படைத்துவிட்டார்.

எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் பின்பக்கமாக உடலை வளைத்து அப்படியே தரையில் தலை வைத்து படுத்து எழுந்து தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் அந்த யோகாசனத்தை செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ஒரே நிமிடத்தில் 15 முறை யோகாசனத்தை செய்தது ‘கோல்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’சிலும் இடம் பிடித்திருக்கிறது.

‘‘டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் டோக்கிேயாவை சேர்ந்த ஒருவர் அந்த ஆசனத்தை செய்தார். அதனை செய்வது கடினமானது என்பது அவருடைய உடல் பாவனையே உணர்த்தியது. நானும் அதுபோல் செய்து பார்த்தேன். சிரமப்பட்டு பயிற்சி மேற்கொண்டேன். அது உலக சாதனையாக மாறியது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதுபோல் மேலும் பல யோகாசனங்களை செய்து சாதனை படைக்க வேண்டும். யோகாசனம் இந்தியாவின் அடையாளம். ஆனால் யோகாசன ம் செய்வதிலும், போட்டிகளில் பங்கேற்பதிலும் இந்தியர்களிடையே ஆர்வம் குறைவாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் சர்வதேச போட்டிகளில் நம்மைவிட சிறப்பாக யோகாசனம் செய்து அசத்துகிறார்கள். நம்மிடையே யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லாதது வருத்த மளிக்கிறது. நான் தினமும் யோகாசன பயிற்சிக்கு மூன்று மணி நேரம் ஒதுக்குகிறேன். யோகா ஆசிரியராக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். லட்சக்கணக்கானவர் களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை என் லட்சியமாக கொண்டிருக்கிறேன்’’ என்கிறார்.

Next Story