மகிழ்ச்சித் தெரபி


மகிழ்ச்சித் தெரபி
x
தினத்தந்தி 3 Dec 2017 2:35 PM IST (Updated: 3 Dec 2017 2:34 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியை சேர்ந்த சிம்ரன் லுத்ரா, சைக்காலஜி மாணவி. படித்து கொண்டிருக்கும்போதே மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ‘மகிழ்ச்சித் தெரபி’ எனும் கவுன்சலிங் முறையை கையாண்டு வருகிறார்.

டெல்லியை சேர்ந்த சிம்ரன் லுத்ரா, சைக்காலஜி மாணவி. படித்து கொண்டிருக்கும்போதே மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ‘மகிழ்ச்சித் தெரபி’ எனும் கவுன்சலிங் முறையை கையாண்டு வருகிறார். எப்போதும் புன்னகையுடன் உலா வரும் இவர் இதுவரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார். அவர்களில் 13 பேரை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்டெடுத்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் மிக கொடிய நோயாக உருவெடுத்து கொண்டிருக்கிறது என்கிறார், சிம்ரன்.

‘‘ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் மனம் விட்டு பேச விரும்புகிறார்கள். தங்களுடைய உள்ளக் குமுறல்களை பகிர்ந்து கொள்ள விருப்பப் படுகிறார்கள். ஆனால் மற்றவர் களின் வேதனையையும், பிரச்சினைகளையும் கேட்டறிந்து அவர் களது மனதை சாந்தப்படுத்தும் மனநிலையில் பெரும்பாலானோர் இருப்பதில்லை. அதுவும் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது.

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் செல்போனில் அழைத்தார். ரெயில் நிலையத்தில் இருப்பதாகவும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறினார். அவர் மிகுந்த மன வேதனையில் இருப்பதை புரிந்து கொண்டதும், அவரை ஆசுவாசப்படுத்தி பேசினேன். தன்னுடைய குடும்ப பிரச்சினைகளை விவரித்தார். யாரும் தன்னுடைய நலனில் அக்கறை கொள்ளவில்லை, தான் வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று வேதனையோடு கூறினார். அவரிடம் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினேன். அதன் பிறகு தற்கொலை எண்ணத்தை கைவிட்டார்’’ என்கிறார்.

எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும் என்பதே சிம்ரனின் வேண்டுகோளாக இருக்கிறது.

Next Story