சிதம்பரத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
சிதம்பரத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த மூதாட்டி இறந்தார்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் சரிவர மூடப்படவில்லை. இதனால் தற்போது பெய்த மழையால் நீர் அந்த பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக நடந்து வருபவர்கள், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் பள்ளத்தில் தேங்கிநின்ற மழைநீரில் தவறி விழுந்து இறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
சிதம்பரம் தொப்பையன் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி சரஸ்வதி(வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு கோட்டையன் சந்து வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில், சரஸ்வதி தவறி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story