ஊட்டி அருகே அரசு பஸ் மரத்தில் மோதியது; 9 பேர் காயம்
ஊட்டி அருகே அரசு பஸ் மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர்.
ஊட்டி,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஊட்டிக்கு தமிழக அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை ஊட்டி லவ்டேல் பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 46) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 26 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த அரசு பஸ் கூடலூரில் இருந்து ஊட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, தலைகுந்தா பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக திடீரென ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
திடீரென சத்தம் கேட்டதும் பஸ்சில் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். விபத்தில் பஸ்சின் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த டிரைவர் உள்பட 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறி கீழே சாலையில் விழுந்தது.காயம் அடைந்த டிரைவர் ரமேஷ் உள்பட 9 பேரும் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஊட்டியை சேர்ந்த பபுசியா (49), சாந்தி (48), செல்வி (43), விஜியா (45), செப்பன் (56), நஞ்சன் (58), ஓசூரை சேர்ந்த பாபுசையீப் (31), அரியலூரை சேர்ந்த சின்னமருது (22) ஆகிய 8 பேரும் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story