சிங்கப்பெருமாள்கோவிலில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
சிங்கப்பெருமாள் கோவிலில் டெங்கு காய்ச்சலால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் சந்தைமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது 35). இவர்களுக்கு சந்தோஷ் (13), சதாசிவம்(11) என 2 மகன்கள் உள்ளனர். செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் சந்தோஷ் 8-ம் வகுப்பும், சதாசிவம் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 26-ந்தேதி முதல் கலைச்செல்வி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையவில்லை. இதனால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது உறவினரகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள்
கூறும்போது, “எங்கள் பகுதியில் எந்த நேரமும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் மழைநீரை அகற்றக்கோரி புகார்கள் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலேயே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கலைச்செல்வி பலியாகி விட்டார். இனிமேலாவது சுகாதார துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Tags :
Next Story