எடியூரப்பாவின் ஊழல்களை பிப்ரவரியில் பகிரங்கப்படுத்துவேன் மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி
எடியூரப்பாவின் ஊழல்களை பிப்ரவரியில் பகிரங்கப்படுத்துவேன் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
பெங்களூரு,
எடியூரப்பாவின் ஊழல்களை பிப்ரவரியில் பகிரங்கப்படுத்துவேன் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
ஊழல்களை பகிரங்கப்படுத்துவேன்விஜயாப்புரா மாவட்டத்தில் மாற்றத்திற்கான பயண கூட்டங்களில் பேசிய எடியூரப்பா, எனக்கு எதிராக ஊழல்களை பகிரங்கப்படுத்துவதாக கூறியுள்ளார். நான் எந்த ஊழலையும் செய்யவில்லை. எடியூரப்பாவின் ஊழல்களை வருகிற பிப்ரவரி மாதம் பகிரங்கப்படுத்துவேன். இதுகுறித்து நான் ஏற்கனவே கூறியுள்ளேன். நீர்ப்பாசனத்துறையில் நடந்த வளர்ச்சி பணிகளை எடியூரப்பாவும், ஜெகதீஷ் ஷெட்டரும் ஆய்வு செய்வதாக கூறி இருக்கிறார்கள்.
வளர்ச்சி பணிகளில் ஏதாவது தரம் குறைந்திருந்தால் அதற்கு ஒப்பந்ததாரர்கள் தான் பொறுப்பு. அதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வருகிற 15–ந் தேதி மகதாயி நதியில் இருந்து நீர் பெற்று கொடுப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். இது மகிழ்ச்சியான செய்தி. அவரை பாராட்டுகிறேன். ஆனால் இது எப்படி சாத்தியம் என்பது எனது கேள்வி.
அங்கீகாரம் கிடைக்க வேண்டும்அங்கு அணை எதுவும் இல்லை. அங்கிருந்து எடியூரப்பா எப்படி தண்ணீரை கொண்டு வருகிறார் என்பதை நான் பார்க்கிறேன். லிங்காயத்துக்கு தனி மதம் கோரி விஜயாப்புராவில் வருகிற 10–ந் தேதி மாநாடு நடைபெற உள்ளது. லிங்காயத் இந்து மதத்தை சேர்ந்தது இல்லை. யாரோ சிலர் இதை இந்து மதத்தில் சேர்த்துவிட்டனர்.
நாங்கள் யாருக்கும் எதிராக போராடவில்லை. அரசியல் சாசனத்தில் பசவண்ணருக்கும், லிங்காயத் சமூகத்திற்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். தேவைப்பட்டால் வீரசைவ சமூகத்தினர் எங்களுடன் வரட்டும். அதற்கு எந்த தடையும் இல்லை. இல்லாவிட்டால் வீரசைவ சமூகம் தனி மதம் என்று கூறி இட ஒதுக்கீடு பெறட்டும். நாங்கள் அதை எதிர்க்க மாட்டோம்.
வெற்றியை தடுக்க முடியாதுஆனால் வீரசைவ லிங்காயத் என்று சொல்ல வேண்டாம். மத்திய–மாநில அரசுகளிடம் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை அங்கீகாரம் கிடைக்காவிட்டால் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். சட்டசபை தேர்தலில் நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.