ஜெயலலிதா முதலாமாண்டு நினைவு தினம்: அ.தி.மு.க.வினர் மவுன அஞ்சலி ஊர்வலம்


ஜெயலலிதா முதலாமாண்டு நினைவு தினம்: அ.தி.மு.க.வினர் மவுன அஞ்சலி ஊர்வலம்
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி கரூரில் அ.தி.மு.க.வினர் மவுன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

கரூர்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணமடைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு தினமான நேற்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது. கோவை சாலையில் அஜந்தா தியேட்டர் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை தாங்கினார். ஊர்வலம் மனோகரா கார்னர், ஜவகர் பஜார், எம்.எல்.ஏ. அலுவலகம், உழவர் சந்தை வழியாக கரூர் பஸ் நிலையம் வந்தது. பின்னர் அங்கு மேடையில் வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற பலர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்படத்தை கையில் ஏந்தியபடி சென்றனர். மேலும் பலர் கருப்பு சட்டையும், கருப்பு பட்டையும் அணிந்திருந்தனர். பெண் நிர்வாகிகள் கருப்பு சேலை உடுத்தியிருந்தனர். சிலர் கருப்பு கொடியையும் கையில் ஏந்தியபடி சென்றனர்.

ஊர்வலத்தில் மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, மாணவர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் என்.தானேஷ், ரிஷி இன்டஸ்ட்ரீஸ் கே.செந்தில்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஏ.பி.ராமசாமி, முன்னாள் கரூர் தொகுதி செயலாளர் எஸ்.திருவிகா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் வக்கீல் வி.சி.கே.பாலகிருஷ்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கே.சி.பரமசிவம், கரூர் ஒன்றிய கழக செயலாளர் என்ஜினீயர் கே.கமலக்கண்ணன், முன்னாள் மாவட்ட கழக பொருளாளர் பேங்க் ஆர்.நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கரூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெயின்போ ஆர்.சேகர், ஸ்ரீ டிராவல்ஸ் கே.என்.முருகேசன், ஊராட்சி கழக செயலாளர் ரெயின்போ ஆர்.மணிகண்டன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி எம்.ஆர்.கே.செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மவுன அஞ்சலி ஊர்வலத்தையொட்டி கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கரூர் டவுன் பகுதியில் பல இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

Next Story