கடலூர் மீனவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்


கடலூர் மீனவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Dec 2017 4:00 AM IST (Updated: 6 Dec 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி’ புயலில் சிக்கிய கடலூர் மீனவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர்,

ஒருங்கிணைந்த பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூர் முதுநகரில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.

வடக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடலூர் பாராளுமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கருணாநிதி, மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார், துணை தலைவர் வைத்திலிங்கம், மாவட்ட அமைப்பு செயலாளர் பி.ஆர்.பி.வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் ராஜ்குமார், ராஜசேகர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சந்திர சேகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், வன்னியர் சங்க தலைவர்கள் காசிலிங்கம், செயலாளர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரகாசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.

மாவட்ட இளைஞர் அணி தலைவர் வாட்டர் மணி, மாநில இளைஞர் அணி துணை தலைவர் விஜயவர்மன், தொழிற்சங்க தலைவர் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஏ.சி.மணி, அமைப்பு துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் பேரிடரை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவை வர வழைத்து தயார் நிலையில் இருக்க செய்துள்ள மாவட்ட கலெக்டருக்கு பாராட்டு தெரிவிப்பது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான கடலூர் மாவட்ட மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அழுத்தம் தருவதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story