குமரி மாவட்டம் முழுவதும் 72 மணி நேரத்துக்குள் மின்வினியோகம் சீராகும்


குமரி மாவட்டம் முழுவதும் 72 மணி நேரத்துக்குள் மின்வினியோகம் சீராகும்
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டம் முழுவதும் இன்னும் 72 மணி நேரத்துக்குள் மின்வினியோகம் சீராகும் என்று தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் சாய்குமார் தெரிவித்தார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சாய்குமார், குமரி மாவட்ட புயல் சேத மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மின்வாரியத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேற்று கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய சீரமைப்பு பணிகள் வேகமாக நடக் கிறது.

குமரி மாவட்டத்தில் 10,500 மின்கம்பங்கள் பழுதடைந்ததில், இதுவரை 7,500 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 2 இயக்குனர்கள் மேற்பார்வையில் 10 தலைமை பொறியாளர்கள், 18 கண்காணிப்பு பொறியாளர்கள்் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,320 களப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகள் தொய்வில்லாமல் மேற்கொள்ள பணியாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள கூடுதலாக தென்மாவட்டங்களிலிருந்து 1,000 பணியாளர்கள் வருகை தர உள்ளனர். சில கிராமங்களில்் புயலில் சாய்ந்த மரங்களை, அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஊராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்புடன் அகற்றி, மின்சார வினியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் இன்னும் 72 மணிநேரத்திற்குள் மாவட்டம் முழுவதும் மின்சார வினியோகம் சீராகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story