புதுவைக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் கடலில் மூழ்கினர்


புதுவைக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் கடலில் மூழ்கினர்
x
தினத்தந்தி 6 Dec 2017 3:45 AM IST (Updated: 6 Dec 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

புதுவைக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் கடலில் மூழ்கினர்.

புதுச்சேரி,

ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது23). இவர் தனது நண்பர் அல்தாப்(22) உள்பட 7 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர் நேற்று மாலை பழைய துறைமுகம் அருகில் கடலில் இறங்கி குளித்தனர். நேற்று கடலின் சீற்றம் வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்பட்டது.

இந்தநிலையில் முத்து, அல்தாப் ஆகிய 2 பேரும் கடல் அலையில் இழுத்துச்செல்லப்பட்டனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் இருவரும் பலியாகி இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கடலில் மூழ்கியவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை அவர்களது உடல்கள் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணியை கைவிட்டனர். மீண்டும் இன்று காலை தேடும்பணியை மேற்கொள்வது என முடிவு செய்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story