மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்


மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்
x
தினத்தந்தி 6 Dec 2017 4:30 AM IST (Updated: 6 Dec 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ரூ.50 லட்சம் நிவாரண உதவியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, கடன் உதவி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 360 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் அந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரித நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது காலம் கடத்தாமல் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும் குறைகேட்பு கூட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான திட்டக்குடி தாலுகா தி.இளமங்கலத்தை சேர்ந்த தென்னரசன் மகன் மாதவனின் குடும்பத்துக்கு முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கயல்விழி என்பவரிடம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) கூஷ்ணாதேவி, தனித்துணை ஆட்சியர்(முத்திரைத்தாள்) சேதுராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராமு, மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் உள்பட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story