ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவில் பாந்திரா– வெர்சோவா கடல்வழி பாலத்திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல்
ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவில் கட்டப்பட உள்ள பாந்திரா– வெர்சோவா கடல்வழி பாலத்திட்டத்திற்கு மாநில அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.7500 கோடி கடல்பாலம் மும்பையில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பாந்திரா– ஒர்லி இடையே கடல்வழி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம்
மும்பை,
ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவில் கட்டப்பட உள்ள பாந்திரா– வெர்சோவா கடல்வழி பாலத்திட்டத்திற்கு மாநில அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.7500 கோடி கடல்பாலம்மும்பையில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பாந்திரா– ஒர்லி இடையே கடல்வழி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2009–ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதே ஆண்டு பாந்திரா– வெர்சோவா இடையே ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவில் கடல்வழி பாலத்தை கட்ட மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து இந்த திட்டத்திற்கு கடலோர கட்டுப்பாட்டு மண்டலம், சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது. எனினும் அதன் பிறகு இந்த திட்டத்திற்கு மாநில அரசு இறுதி ஒப்புதல் அளிக்காமல் இருந்தது.
மாநில அரசு இறுதி ஒப்புதல்இந்தநிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பாந்திரா– வெர்சோவா கடல்வழி பாலத்திட்டத்திற்கு மாநில அரசு பச்சை கொடி காட்டியுள்ளது. இந்த திட்டத்திற்கு அரசு இறுதி ஒப்புதல் அளித்த அரசாணையை நேற்று முன்தினம் மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
பாந்திரா– வெர்சோவா கடல்வழி மேம்பால திட்ட பணிகளை மராட்டிய மாநில சாலை மேம்பாட்டு கழகம் மேற்கொள்கிறது.
4 மாதத்தில் டெண்டர்திட்டப்பணிகளை பொறியியல்– கொள்முதல்– கட்டுமானம் (இ.பி.சி.) என்ற வழிமுறையை பின்பற்றி மேற்கொள்ளுமாறு மாநில சாலை மேம்பாட்டு கழகத்திற்கு முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இ.பி.சி. வழிமுறை என்றால், கடல்வழி பாலம் திட்டப்பணிகள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மாநில சாலை மேம்பாட்டு கழகத்திற்கு வழங்கப்படும். அவர்கள் கடல்வழி பால கட்டுமான பணி மேற்கொள்ளவும், பாலம் கட்டிமுடித்த பின் சுங்கவரி வசூல் செய்யவும் வெவ்வேறு ஒப்பந்ததாரரை நியமிப்பார்கள்’’ என்றார்.
பாந்திரா– வெர்சோவா கடல்வழி பாலத்திற்கான டெண்டர் அடுத்த 4 மாதங்களுக்குள் விடப்படும் என கூறப்படுகிறது.