பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் கோட்டையிலும் தீவிர கண்காணிப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணி, வேலூர் கோட்டையிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர்,
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (புதன்கிழமை) அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்திலும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பணியில் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்டத்தின் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் கோட்டையில் 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோட்டை முன்புள்ள காந்தி சிலையின் இருபுறங்களிலும் கோட்டைக்குள் செல்லும் பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோட்டை நுழைவு வாயிலுக்கு முன்பு தடுப்புகள் அமைத்து அங்கும் போலீசார் நிறுத்தப்பட்டு கோட்டைக்குள் செல்லும் வாகனங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர். அதன்பின்னர் கோட்டைக்குள்ளேயும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய ரெயில் நிலையங்களான காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களிலும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை செய்தபின்னரே ரெயில் ஏறுவதற்கு அனுமதிக்கின்றனர். அதேபோல் ரெயிலில் இருந்து இறங்கும் பயணிகளும் சோதனைக்கு பின்னரே வெளியில் அனுப்பப்படுகின்றனர்.

Related Tags :
Next Story