நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு


நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2017 4:12 AM IST (Updated: 6 Dec 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது.

நெல்லை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையையொட்டி ஜெயலலிதா உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் கணேசராஜா தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் சிலர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்து கொண்டனர்.

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் 5-வது வட்ட அ.தி.மு.க. சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு சுரேஷ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் செல்வசேகர், செல்வமணி, செல்வராஜ், கொம்பையா, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நாங்குநேரி ஒன்றியம் இட்டமொழியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன் தலைமை தாங்கி, ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் பாளையங்கோட்டை யூனியன் பொன்னாக்குடியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் 250 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை அவை தலைவர் காபிரியேல் தேவா, பேரின்பபுரம் இளைஞர் பாசறை செயலாளர் சாமுவேல், விவசாய சங்க பிரதிநிதி சிதம்பரதேவர், கிளை செயலாளர்கள் துரைராஜ் தேவர், ஆர்ச்பால், டேவிட், சுடலை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கி, ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் கவுன்சிலர்கள் பிரம்மா பேச்சிமுத்து, பழனிபாண்டியன், புதுக்குளம் அவை தலைவர் வேல்முருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் பரமசிவம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்திரன், செல்லத்துரை நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story