அனல் மின் நிறுவனத்தில் வேலை


அனல் மின் நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 6 Dec 2017 11:44 AM IST (Updated: 6 Dec 2017 11:44 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அனல் மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது.

தேசிய அனல் மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது. ராய்ப்பூரில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது புதிய புராஜக்ட் திட்டத்திற்காக டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 69 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும், பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. படிப்புடன், தட்டச்சு தெரிந்தவர்கள் ஆகியோருக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.

விண்ணப்பதாரர் 1-1-2018 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 31-12-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய முகவரி DGM (HR. RECTT.) NTPC limited western region 2, head quarters, 4th floor, magneto offizo. labhandi. GE road. NH6, Raipur cG 492001

இது பற்றிய விரிவான விவரங்களை www.ntpccareers.net என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Next Story