சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 9 வக்கீல்கள் தேர்வு மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை


சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 9 வக்கீல்கள் தேர்வு மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை
x
தினத்தந்தி 7 Dec 2017 5:00 AM IST (Updated: 7 Dec 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 60 நீதிபதிகள் உள்ளனர். 15 இடங்கள் காலியாக உள்ளன.

சென்னை,

ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சஞ்சய்கிஷன் கவுல் இருந்தபோது, அவர் தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு, 11 வக்கீல்களை நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை செய்தது.

அதாவது, சென்னை ஐகோர்ட்டில் அரசு தலைமை குற்ற வியல் (பொறுப்பு) வக்கீலாக இருக்கும் சி.எமிலியாஸ், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வரும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் பிரசாத், வக்கீல்கள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், செந்தில்குமார் ராமமூர்த்தி, என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணா ராமசாமி, சி.சரவணன் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரை செய்தனர்.

இந்த 11 வக்கீல்களின் பெயரை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு பரிசீலித்தது. இதில், 9 வக்கீல்களை நீதிபதிகளாக நியமிக்க மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த ஆவணங்கள் எல்லாம் மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் 9 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story