ஆதிதிராவிடர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு குறித்து சித்தராமையா ஆலோசனை மந்திரி ஆஞ்சனேயா தகவல்


ஆதிதிராவிடர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு குறித்து சித்தராமையா ஆலோசனை மந்திரி ஆஞ்சனேயா தகவல்
x
தினத்தந்தி 7 Dec 2017 2:30 AM IST (Updated: 7 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு குறித்து சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளதாக மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.

பெங்களூரு,

ஆதிதிராவிடர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு குறித்து சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளதாக மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.

சாதிவாரி மக்கள்தொகை

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆதிதிராவிடர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு குறித்து நீதிபதி சதாசிவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சங்களை அமல்படுத்த ஆதிதிராவிட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளார். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன.

அரசு பொருளாதார கல்லூரி

இதுபற்றியும் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அம்பேத்கரின் விருப்பங்களை நிறைவேற்ற மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ரூ.150 கோடி செலவில் அரசு பொருளாதார கல்லூரி தொடங்கியுள்ளோம். வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு அம்பேத்கர் அவாஸ் திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அம்பேத்கர் அற்புதமான அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டுக்கு கொடுத்துள்ளார். அவருடைய நினைவு நாளான இன்று (அதாவது நேற்று) நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

இவ்வாறு மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.


Next Story