மதுரை மாவட்டம் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னோடியாக விளங்கி வருகிறது கலெக்டர் வீரராகவராவ் பேட்டி


மதுரை மாவட்டம் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னோடியாக விளங்கி வருகிறது கலெக்டர் வீரராகவராவ் பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2017 4:30 AM IST (Updated: 7 Dec 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

மதுரை,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதை அவருக்கு வழங்கினார். இதனை தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது," அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் மதுரை மாவட்டம் முன்னோடியாக விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கொண்டு வந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய காரணத்திற்காக தற்போது தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. இந்த விருதையும் சேர்த்து 3 தேசிய விருதுகள் நமது மாவட்டத்திற்கு கிடைத்திருப்பது பெருமைக்குரியது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அரசு அதிகாரிகள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

அவருக்கு மதுரை மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், பாண்டியராஜா, பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story