திருமானூர், ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


திருமானூர், ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 7 Dec 2017 4:15 AM IST (Updated: 7 Dec 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர், ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழகொளத்தூர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இலநந்தனர் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர்கள் எசனை கண்ணன், சுள்ளங்குடி கண்ணன் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தே.மு.தி.க. சார்பில் ஒன்றிய மாணவரணி செயலாளர் கார்த்திக் தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரவிசங்கர் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் நினைவு நாளை முன்புனிட்டு பாரதீய ஜனதா கட்சி சார்பில் பொதுச்செயலாளர் அய்யப்பன் தலைமையில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ம.க. சார்பில் அரியலூர் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story